2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நுண்நிதிக் கடன் பெறுனர்கள் பாதிப்பு

Ilango Bharathy   / 2021 ஜூலை 22 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

கொரோனாத் தொற்றால், மாத்தளை மாவட்டத்தில் நுண்நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளவர்கள்  பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

நாட்டில் வறுமைக் கோட்டில் வாழ்பவர்களை இலக்காக வைத்து பல வேலைத்திட்டங்கள்
செயற்படுத்தப்பட்டாலும் தற்போது தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோராலும் நுண்நிதிக் கடன் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கொரோனாத் தொற்றால் பயணக்கட்டுபாடுகள், முடக்கம் என்பவற்றுக்கு மத்தியில், கடனைப் பெற்று வர்த்தக நிலையங்களை ஆரம்பித்தவர்கள் மற்றும் வேறு பல தேவைகளுக்காக நுண்நிதியைப் பெற்றவர்கள் தற்போது, கடனையோ தவணைக் கட்டணத்தையோ செலுத்த முடியாத நிலையில், கடனை வழங்கியவர்கள், கடனை செலுத்த தாமதமாகும் போது, அதிக வட்டியை அறவிடுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் சில இடங்களில் கடனை அல்லது தவணைக் கட்டணத்தை அறவிட வருபவர்கள்,
கடனைப் பெற்ற பெண்களை பல்வேறு நெருக்கடிகளுக்கும் மன உளைச்சலுக்கும்
உள்ளாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சில நிறுவனங்கள் 12 சதவீதத்திலிருந்து 35 சதவீதம் வரையான வட்டி
அறவிடுவதாகவும் இதனால் நுண்நிதிக் கடனைப் பெற்றவர்கள் அசௌகரியங்களை
எதிர்நோக்குவதாகவும் மாத்தளை பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .