2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

நுவரெலியா பிரதேச சபையின் நிதி அறிக்கை நிறைவேற்றம்

ஆ.ரமேஸ்   / 2018 டிசெம்பர் 24 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கை, சபையின் தவிசாளர் வேலு யோகராஜினால் இன்று (24) சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

பிரதேசத்தின் அபிவிருத்தியே இலக்கு என்பதால், சபையில் அங்கம் வகிக்கும் ஆளும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 23 உறுப்பினர்களும், 2019ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கையை, ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். 

இதனால், குறித்த நிதி அறிக்கை, விவாதத்துக்கு உட்படுத்தப்படாது, நேரடியாக வாக்கெடுப்புக்கு விடப்பட்டதுடன் 23 உறுப்பினர்களில் ஒருவர், நேற்றைய சபை அமர்வில் பங்குபற்றாத நிலையில் 22 உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன், அறிக்கை நிறைவேற்றப்பட்டது.

நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நான்கு பிரதேச சபைகளில், நுவரெலியா பிரதேச சபையும் ஒன்றாகும். இந்தப் பிரதேச சபை, கடந்த மார்ச் மாதம் இயங்கத் தொடங்கியதிலிருந்து, இதுவரை 70 அபிவிருத்தித் திட்டங்கள், பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .