2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

நுவரெலியா மாநகரசபையின் நிதி அறிக்கை நிறைவேற்றம்

Kogilavani   / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

நுவரெலியா மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கை, 12 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நுவரெலியா மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கையை, மாநகர முதல்வர் சந்தனலால் கருணாரத்ன,  நேற்றைய அமர்வில் சமர்ப்பித்தார். 

இதன்போது நிதி அறிக்கைக்கு ஆதரவாக, முதல்வர் உட்பட 13    வாக்களித்தனர். 
எதிராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மஹிந்த  தொட்மபே கமகே வாக்களித்தார்.  சபைக்கு வருகை தந்திருந்த மொட்டு அணியின் உறுப்பினர் எம்.பி.நவரட்ணம் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

அவருடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இரு உறுப்பினர்களான சட்டத்தரணி சிவன்ஜோதி யோகராஜ், ஜெயராம் வினோஜி ஆகியோர் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்தனர்.

இவர்களைத் தவிர நேற்றைய சபை அமர்வில் 6 உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. 
இந்நிலையில், 13 மேலதிக வாக்குகளால் நிதி அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X