Kogilavani / 2020 டிசெம்பர் 09 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 245 ஆக உயர்வடைந்துள்ளதாக, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் இமேஸ் பிரதாப்சிங்க தெரிவித்தார்.
இம்மாவட்டத்தில் தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பைப் பேணிய 400 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இன்று (9) மதியம்வரை 5,021 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அம்பகமுவ பிரதேசத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளடன், தண்டுகலா, பிளக்வாட்டர் ஆகிய இரண்டு தோட்டங்களும் முடக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
நுவரெலியா நகரில் உணவகம் ஒன்றும் வர்த்தக நிலையம் ஒன்றும் மூடப்பட்டுள்ளதுடன், முடக்கப்பட்டுள்ளதுடன் 76 பேர் சுயத்தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago