R.Maheshwary / 2021 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
நுவரெலியா மாவட்டத்தில் மொத்தமாக 26,690 பேருக்கு மாத்திரமே, 2,000 ரூபாய் வழங்குவதற்கு அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளதென தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன், இதற்கமைய, ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை மய்யப்டுத்தி இந்த கொடுப்பனவு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென்றார்.
கொரோனா தொற்றால் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுக்கமைய, அன்றாட வருமானத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு மாத்திரம், அரசாங்கத்தால் இரண்டாயிரம் ரூபாய் நிவாரணக் கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதென்றார்.
நுவரெலியா மாவட்டத்தில் 2,000 ரூபாய் நிவாரணத்தொகையில் பிரச்சனை இருப்பதாக தெரிவித்து வருகின்ற நிலையில், இத்தொகை சமூர்த்தி பயனாளிகள்,முதியோர் கொடுப்பனவை பெறுபவர்கள்,மாதாந்த சம்பளத்தை பெறுபவர்கள் என்போரை தவிர்த்து ஊரடங்கு காலப்பகுதில் அன்றாட வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கே வழங்கப்பட அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என்றார்.
30 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
4 hours ago