Kogilavani / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ரமேஸ்
நுவரெலியா மாவட்டத்தில் ஹங்குராங்கெத்த, பொகவந்தலாவை ஆகிய பிரதேசங்களில் இரண்டு தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஹங்குராங்கெத பிரதேச வைத்தியசாலை, பொகவந்தலாவையில் பெருந்தோட்டத்துக்கு உரித்தான விடுதி ஒன்று என்பவையே தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ள என்று, நுவரெலியா மாவட்ட சுகாதாரத் திணைக்கள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் இமேஷ் பிரதாப் சிங்க தெரிவித்தார்.
வெளிமாவட்டங்களில் தொற்றாளர்களாக இனங்காணப்படும் வயோதிபர்களை மேற்படி நிலையங்களில் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஹங்குராங்கெத்த வைத்தியசாலையைப் பொறுப்பேற்றதன் பின்னர் அங்கு தொற்றாளராக இனங்காணப்பட்ட 12 வயது பாடசாலை சிறுவன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago