2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

நுவரெலியாவிலுள்ள மதுபான விற்பனை நிலையமொன்றுக்கு பூட்டு

Gavitha   / 2020 நவம்பர் 24 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

நுவரெலியா நகரத்திலுள்ள மதுபான விற்பனை நிலையத்தில் பணியாற்றிய அனைவரும் இன்று (24) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த மதுபான விற்பனை நிலையமும் மூடப்பட்டுள்ளது என, நுவரெலியாமாநகர சபை சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த மதுபான விற்பனை நிலையத்துக்கு, கண்டியைச் சேர்ந்த ஒருவர் வருகை தந்து மது அருந்தியுள்ளார் என்றும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்தே, குறித்த மதுபான விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ளது.

நகரங்களில் இயங்கும் விற்பனை நிலையங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பதிவு செய்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும், பலர் அதைப் பின்பற்றுவதில்லை என்றும் எனவே, தகவல்களை உரிய முறையில் பேணாத நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சுற்றுலா விடுதிகளுக்கு, மிகவும் அவதானமான பகுதியில் இருந்து வருகை தரும் எவறையும் தங்கவைக்கவேண்டாம் என்றும் இதன்போது அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X