2026 மே 02, சனிக்கிழமை

நுவரெலியாவில் அரிசியைப் பதுக்க முயற்சி?

டி. ஷங்கீதன்   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கமானது அரிசிக்கு நிர்ணய விலையை நியமித்துள்ளதால், அதிக விலைக்கு அரிசி வகைகளைக் கொள்வனவு செய்த வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளதுடன், இதனால் அரிசியைப் பதுக்கும் முயற்சிகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நுவரெலியாவிலும் அரிசிக்கு தட்டுபாடு ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், நிலைமை மிகவும் மோசமடையும் என்றும், நுவரெலியா ஒன்றிணைந்த வியாரபாரிகள் சங்கத்தின் தலைவர் டக்ளஸ் நாணயக்கார எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர், நுவரெலியா மாவட்டச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தற்போது அரிசி, பால் மா, மிளகாய்த்தூள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்பில் மிகவும் குறைவாகவே உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

அரிசியை முறையாக வர்த்தகர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல், நிர்ணய விலையில் விற்பனை செய்வது என்பது முடியாத காரியமாகும் என்றும் ஏறகெனவே பருப்பு, டின்மீன் போன்றவற்றை, நிர்ணய விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என அரசாங்கம் விடுத்த அறிவித்தலை தொடர்ந்து, தற்போது அந்தப் பொருள்கள், அநேகமான மக்களுக்கு கிடைக்காமல் போய் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தம்மிடம் கையிருப்பில் இருக்கின்ற அரிசி 98.00 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்பட்டதாகவும் அதிலும் குறைவான தொகையே தம்மிடம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளதுடன், எனவே மாவட்டச் செயலாளரின் மேலான பதிலை தொடர்ந்து, அரிசியை கொள்வனவு செய்வதா? இல்லையா? என்ற தீர்மானத்துக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .