Editorial / 2023 மே 21 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி சந்ரு, செ.திவாகரன்
நுவரெலியாவில் பிரதான நகரில் பிரசித்தி பெற்ற புதிய கடை வீதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீயில் மூவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
வழக்கம் போல் உணவகத்தில் சமையல் வேலை செய்வதற்கு எரிவாயு அடுப்பை செயற்படுத்திய போது சமையல் எரிவாயு அடுப்பில் வாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் , இதையடுத்து ஹோட்டலில் தொழில் புரியும் ஊழியர்களும், ஏனைய வர்த்தக நிலைய ஊழியர்களும் ஒன்றிணைந்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
சம்பவத்தில் எவருக்கும் உயிர் ஆபத்து ஏற்படவில்லை எனவும் காயமடைந்தவர்கள் மூவரும் 42 , 44 , 63 என வயதுடையவர்கள் எனவும் ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
12 minute ago
35 minute ago
40 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
35 minute ago
40 minute ago
50 minute ago