2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

நுவரெலியாவில் கோழி விலை கடும் உயர்வு

Freelancer   / 2023 ஏப்ரல் 16 , பி.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஆ.ரமேஸ் 

நுவரெலியா மாவட்டத்தில் தற்போது இறைச்சி கோழிக்கு பாரிய தட்டுப்பாடு என்று கூறி ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியை 1700 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதால் நுகர்வோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் 

சித்திரை புத்தாண்டு ஆரம்பிக்க ஒரிரு வாரங்களுக்கு முன்பே கோழி இறைச்சி விலையில் மாற்றத்தை ஏற்படுத்தி வந்த விற்பனையாளர்கள் படிப்படியாக அதிகரிக்கப்பட்ட விலையினை நுகர்வோர்களுக்கு அறிமுகப்படுத்தியும் வந்தனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர், 1080 ரூபாய் தொடக்கம் 1200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு வந்த நிலையில் புது வருட காலம் அண்மித்த போது ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலையை 1500 ரூபாய் தொடக்கம் 1600 ரூபாய்க்கு விற்பணை செய்யப்பட்டது.

தற்போது இறைச்சி கோழிக்கு பாரிய தட்டுப்பாடு என்று கூறி ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியை 1700 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, உடப்புஸலாவ ஆகிய நகரங்களுக்கு கம்பளை, மற்றும் கண்டி, புஸ்ஸலாவை பிரதேசங்களில் காணப்படும் கோழி பண்ணைகளில் இருந்து தோல் உரிக்கப்பட்ட கோழிகள் விற்பனைக்காக கொண்டு வந்து கொடுக்கப்படுகிறது.

இருந்தபோதிலும் கோழி பண்ணையாளர்கள் கொண்டு வந்து கொடுக்கும் கோழி இறைச்சிக்காக விலையை அதிகரிக்கும் நகர் பகுதி விற்பனையாளர்கள் ஒரு கிலோவுக்கு 500 ரூபாய் இலாபம் வைத்து விற்பதாகவும் அறிய முடிகிறது.

அதேநேரத்தில் தமக்கு இறைச்சியாக்கப்பட்ட கோழிகளை கொண்டு வந்து தரும் மொத்த விற்பனையாளர்கள் விலையை  குறைத்து கொடுத்தால் தாமும் விலை குறைத்து வழங்க முடியும் என நகர வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
 
அதேபோலவே முட்டை விலையை அரசாங்கம் நிர்ணத்திருந்த நிலையில், ஒரு சிவப்பு நிற முட்டையின் விலையை 65 ரூபாய்க்கும், ஒரு வெள்ளை நிற முட்டையின் விலையை 55 ரூபாய்க்கும் அதிகரித்து விற்பனை செய்வதால் நுகர்வோர் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

கோழி இறைச்சி விலை தொடர்பில் மாவட்ட நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் கவனம் செலுத்தி உண்மை தன்மையை அறிந்து நுகர்வோர்களுக்கு பாதிப்பு ஏற்படாது விலை அதிகரிப்பை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டுமென நுகர்வோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X