2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

நுவரெலியாவில் பூ பனி பொழிவு

R.Maheshwary   / 2023 ஜனவரி 03 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

நுவரெலியா நகரசபைக்குட்பட்ட பல இடங்களிலும்  அம்பேவல, பட்டிபொல ஆகிய பிரதேசங்களில் இன்று (3) அதிகாலை பூ பனி பெய்தது.

ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதத்தில் நுவரெலியாவில் பூ பனி பொழிவு காணப்படும் நிலையில், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நுவரெலியா நகரிலுள்ள பூங்கா, தேயிலைத் தோட்டங்களில் பூ பனி பொழிவு காணப்பட்டது.

மேலும் இன்று (3) அதிகாலை நு​வரெலியாவின் வெப்ப நிலை 5 பாகை செல்சியஸாக காணப்பட்டதால் அதிகம் குளிரான நிலையை மக்கள் எதிர்கொண்டனர்.

இதேவேளை பூ பனி பொழிவால் தேயிலை, மரக்கறி மற்றும் மலர் உற்பத்திகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .