Editorial / 2025 மே 14 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
நுவரெலியாவிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்கு உள்ளானதில், அதில் பயணித்த நான்கு பயணிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வலப்பனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விபத்து, நுவரெலியா-வலப்பனை பிரதான வீதியில் உள்ள மஹா ஊவா வளைவுப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (13) மாலை 6:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு பகுதியிலிருந்து நுவரெலியா பகுதிக்கு சுற்றுலாவிற்காக குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து, மட்டக்களப்புக்கு மீண்டும் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, பேருந்தின் முன் இடது சக்கரம் கழன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால், பேருந்து வீதியின் இடதுபுறத்தில் உள்ள மலையில் மோதி நிறுத்தப்பட்டது.
பேருந்து விபத்துக்குள்ளான பகுதி செங்குத்தான மற்றும் வளைவுகள் நிறைந்த வீதியில் இருப்பதாகவும், கடந்த காலங்களில் அந்த இடத்தில் பல கடுமையான விபத்துக்கள் நடந்துள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 60 பயணிகள் இருந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
விபத்து குறித்து வலப்பனை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




7 minute ago
19 minute ago
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago
30 minute ago
1 hours ago