Freelancer / 2021 நவம்பர் 07 , பி.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
நுவரெலியா மாநகரசபை எல்லைக்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியமை தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக, அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விசேட கூட்டம் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று (06) இடம்பெற்றது.
வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அண்மையில் பெய்த கடும் மழையின் காரணமாக நுவரெலியாவில் இருந்து கிரெகரி ஏரி வரை தலகல ஓயா நிரம்பி வழிவதால், ஏராளமான கடைகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியமை குறித்து கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
தலகல ஓயா நிரம்பி வழிவதைத் தடுப்பதற்காக கால்வாயின் இருபுறமும் உள்ள அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றி. நீண்ட கால திட்டமாக தலகல ஓயாவை அகலப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது.
கிரெகரி ஏரியிலிருந்து நானுஓயா வரை பாயும் நீரைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயவும் இந்தக் கலந்துரையாடலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
20 minute ago
29 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
29 minute ago
46 minute ago
2 hours ago