2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

நூரளைக்குச் செல்ல ‘சேனா’ முயற்சி; பொலிஸார் தடுப்பு

Editorial   / 2019 ஜனவரி 16 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஞ்சன குமார ஆரயதாச

 

சேனா படைப்புழுவின் தாக்கம், நுவரெலியாவுக்கும் பரவவிருந்த நிலையில், பொலிஸாரின் தலையீட்டால், அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

“சேனா” என்றழைக்கப்படும் படைப்புழுவின் தாக்கத்தால், இலங்கையின் சோளப்பயிர்ச் செய்கை, வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில், சுமார் 80,000 ஹெக்டெயர் சோளப் பயிர்ச்செய்கை பாதிப்படைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. 

இந்நிலையில், தம்புளை பொருளாதார மத்திய சந்தையிலிருந்து நுவரெலியாவுக்கு, லொறியொன்றில் கொண்டு செல்லப்படவிருந்த பெருமளவிலான சோளங்களை, பொலிஸார் கொண்டு செல்லவிடாது தடுத்து நிறுத்தியுள்ளனர். 

சோளங்களை ஏற்றிக்கொண்டு நுவரெலியாவுக்கு லொறியொன்று செல்லவுள்ளதாக, தம்புளை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, லொறியைச் சோதனைக்கு உட்படுத்திய பொலிஸார், சேனாப் படைப்புழுக்கள் இருந்த பெருந்தொகையான சோளங்களைக் கைப்பற்றியதுடன், சோளங்களைக் கொண்டு செல்லவிருந்த நபரை, விசாரணைக்கும் உட்டுபடுத்தியுள்ளனர். 

வட்டவளையிலுள்ள விலங்குப் பண்ணைக்கு, மேற்படி சோளங்களை ஏற்றிச் செல்லவிருந்ததாக, குறித்த நபர், பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார்.  

தம்புளை சந்தையில், சோளம் விலைபோகாததால், ஒரு கிலோகிராம் சோளத்தை, 13 ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும் மிஞ்சிய சோளங்களையே, வட்டவளைக்கு கொண்டுசெல்விருந்ததாகவும், அந்நபர் மேலும் தெரிவித்துள்ளார்.  

இந்த லொறி, நுவரெலியாவுக்குச் சென்றிக்குமாயின், சேனாவின் தாக்கம் நுவரெலியாவுக்கும் பரவியிருக்கும் என்றும் இதனால், பயிர்ச்செய்கைகள், தேயிலைச் செய்கைளுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் தெரிவித்த பொலிஸார், குறித்த லொறியை, தம்புளை பொலிஸ் நிலைய வளாகத்தில் தடுத்து நிறுத்தியுள்ளனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .