2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

நூரளையில் வைத்தியர்கள் மூவருக்கு தொற்று

R.Maheshwary   / 2021 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு

   நுவரெலியா  பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் மூவர் உள்ளிட்ட 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதென, நுவரெலியா பொது வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் மகேந்திர செனவிரட்ன தெரிவித்தார்.

  இதில் 13 தாதியர்களும்  7 கனிஷ்ட பிரிவு ஊழியர்களும் அடங்குவதாத  பணிப்பாளர் தெரிவித்தார்.

 இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளான வைத்தியர்கள், தாதியர்கள்  உள்ளிட்டவர்கள், நுவரெலியா வைத்தியசாலையின் கொரொனா பிரிவு  வார்ட்டுகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

   மேலும்  இவர்களுள் குறைந்த அறிகுறிகளுடன் இருக்கும் சிலர், அவரவர் வீடுகளிலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக, வைத்தியசாலையில் வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X