2025 ஜூலை 05, சனிக்கிழமை

நேற்றைய பேச்சுவார்த்தையும் தோல்வி

Editorial   / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைவாக, 750 ரூபாய்க்கு மேற்பட்ட எந்தவொரு கொடுப்பனவையும் வழங்குவதற்குத் தயாராக இல்லையென்ற நிலைபாட்டிலேயே முதலாளிமார் சம்மேளனம் இருப்பதால், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பில்,   இன்றைய தினம் (07) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்​பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் போது, ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட கூட்டுஒப்பந்தம் இரத்து செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டதோடு, வெறும் 20 ரூபாய்க்கு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமைக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தையில், விசேட பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் (அமைச்சரவை அந்தஸ்தற்ற) வே. இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், அ.அரவிந்தகுமார், கூட்டணியின் பிரதிச் செயலாளர் சண். பிரபா ஆகியோரும், முதலாளிமார் சம்மேளனத்தின் சார்பில் லலித் ஒபேசேகர, கனிஷ்க வீரசிங்க, சுனில் போலியந்த உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .