Ilango Bharathy / 2021 டிசெம்பர் 23 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
நுவரெலியா மாவட்டத்தின் 17 தோட்டங்களைக் கொண்ட டயகம பிரதேசத்தில் 09 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இம்மக்களின் சுகாதார நடவடிக்கைகளுக்காக, வெள்ளையர்களின் காலத்தில் டயகம பிரதேசத்தில் வைத்தியசாலை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு அதனூடாக மக்களுக்கு சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், குறித்த வைத்தியசாலையை 90ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கம் பொறுப்பேற்று புதிய கட்டடம் ஒன்றும் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
எனினும் வைத்தியசாலையின் அபிவிருத்தியை மேலும் முன்னெடுக்க போதியளவான காணி
வசதிகள் இல்லாமல் இருப்பது அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு பெரும்
தடையாகவே இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்துடன், 5 தாதியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு தாதி மாத்திரமே பணியில் ஈடுபட்டு
வருவதால் நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதுடன், இந்த
வைத்தியசாலைக்கென அம்பியூலன்ஸ் வண்டியொன்று இன்மையும் பாரிய குறைப்பாடாக
காணப்படுகின்றது.
எனவே, இப்பிரதேச மக்களின் நலன் கருதி இவ் வைத்தியசாலையில் தரம் உயர்த்தி தேவையான மனித வளங்கள், பௌதீக வளங்களை வழங்கி சிறந்த சுகாதார சேவைகளை மக்களுக்கு வழங்க சகல தரப்பினரும் முன்வர வேண்டும் என பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .