2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

நோயாளர்கள் அவதி

Editorial   / 2018 ஜூன் 08 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்   

அங்கும்புரை வைத்தியசாலைக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் வண்டியைச் செலுத்துவதற்கு, சாரதி ஒருவர் இதுவரை நியமிக்கப்படாமையால், நோயாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.   

இதனால், நோயாளர்களை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்வதற்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களை, மேலதிகச் சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கும் முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

மேற்படி வண்டியைச் செலுத்திய சாரதி, கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்துளள நிலையில், இதுவரை புதிய சாரதியொருவர் நியமிக்கப்படவில்லையெனச் சுட்டிக்காட்டப்படுகிறது.   

இது தொடர்பாக, அங்கும்புரை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.சுஹைப்பை தொடர்புகொண்டு கேட்டபோது,“சாரதி ஒருவரை நியமிக்குமாறு, சம்பந்தப்பட்டத் திணைக்களத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். திணைக்களத்தில், சாரதிகளுக்குப் பற்றாக்குறை இருப்பதால், இதுவரை ஒருவரும் நியமிக்கப்படவில்லை. அம்பியூலன்ஸ் சாரதிகளாகப் புதியவர்களை நியமிப்பதற்கான அமைச்சரவை அங்கிகாரம் பெறப்பட்டுள்ளதால், மிக விரைவில் சாரதி ஒருவர் நியமிக்கப்படுவாரென, திணைக்களம் அறிவித்தது” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X