Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 02 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கிருஸ்ணா
நோர்வூட் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் பிரான்சிஸ் ஹெலன், ஐக்கிய மக்கள் சக்தியின் உப-தவிசாளர் நடராஜ் சிவகுமார் ஆகிய இருவரும் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டனர்.
நோர்வூட் பிரதேச சபையின் செயலாளர் முரளிதரன் முன்னிலையில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பிரான்சிஸ் ஹெலன் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நடராஜ் சிவகுமார் ஆகியோர் கடமைகளை உத்தியோக பூர்வமாக, புதன்கிழமை (02) சுபநேரத்தில் ஏற்றுக்கொண்டனர்.
டின்சின் நகர மத்தியிலிருந்து நோர்வூட் பிரதேச சபை வளாகம் வரை இசை வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அதன்பின்னர், சமய தலைவர்கள் ஆசியுடன் கடமையேற்றனர்.
நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் நோர்வூட் தொகுதி அமைப்பாளர் லலித் சுரவீர உயர்பீட உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளரும் அம்பகமுவ பிரதேச சபை தலைவருமான கபில நாகந்தல் தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் ஜி.நகுலேஸ்வரன் உட்பட ஆதரவாளர்கள் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .