Editorial / 2018 மார்ச் 29 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன்
இவ்வருடம் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் பல உள்ளூராட்சி மன்றங்களில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதிகாரங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில், நோர்வூட் பிரதேச சபையினையும், இ.தொ.கா, தனது அதிகாரத்தினை நேற்று (28) உறுதிபடுத்திக்கொண்டதையடுத்து, அச்சபைக்கான தலைவராக இ.தொ.கா, உறுப்பினர்களான டி.கிசோகுமார் தலைவராகவும், கே.சிவசாமி உபதலைவராகவும், இ.தொ.கா.வின் தலைவரும், பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர்.
நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில், நோர்வூட் பிரதேச சபைக்கு, இ.தொ.கா. சார்பாக 11 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சி சார்பாக 08 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக ஒவ்வொரு உறுப்பினருமாக மொத்தம் 21 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஸ்வரன் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
5 minute ago
23 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
23 minute ago
41 minute ago
1 hours ago