Kogilavani / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆ.ரமேஷ்
'தலவாக்கலை சென்கிளயரில் அமைந்துள்ள புகையிரத நிலையத்தை புனரமைப்பதற்கு, உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என நிலைய அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
'இந்நிலையத்தில், மேடையானது பழுதடைந்த நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுவதுடன் ரயிலின் மூன்றாவது வகுப்புகளில் பயணிக்கும் பயணிகள் இறங்கும் இடமானது புற்கள் வளர்ந்து காடாக காணப்படுகின்றது.
இதனால், பயணிகள் பல்வேறு அசௌகரிங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதேவேளை, பயணிகளின்; பாவனைக்காக அமைக்கப்பட்டுள்ள மலசலக்கூடமும் பாவனைக்கு உதவாத நிலையில் பராமரிப்பின்றி காணப்படுவதுடன் பழுதடைந்தும் காணப்படுகின்றது' என பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கும் புகையிரதமானது இந்த புகையிரத நிலையத்தில் காலை,மாலை என இரண்டு வேளைகளும் தரித்து செல்லும்.
ஆங்கிலேயர் காலத்தில் சென்கிளயர் தோட்ட தொழிற்சாலையிலிருந்து தேயிலை பெட்டிகளை ஏற்றிச் செல்வதற்காக அமைக்கப்பட்ட இந்நிலையம் காலப்போக்கில் பயணிகளின் பாவனைக்காகவும் விடப்பட்டது.
இத்தகைய பழமைவாய்ந்த நிலையத்தை, இலங்கை புகையிரத சேவை கவனத்தில் கொண்டு மறுசீரமைப்பு செய்து தரும்படி பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
37 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
57 minute ago