Kogilavani / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்
மண்சரிவு அனர்தத்ததை எதிர்கொண்டுள்ளஈ பத்தனை மவுண்ட்வேர்ணன் பூங்கந்தை தோட்டத்தைச் சேர்ந்த 68 குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடமொன்றில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
பத்தனை பூங்கந்தை தோட்டத்தில் தற்காலிக குடில்களில் வாழுகின்ற 40 குடும்பங்களுக்கு மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக வழங்கப்பட்ட கூரை தகரங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,
'பத்தனை பிரதேசத்திலுள்ள பூங்கந்தை தோட்ட மக்கள், போதிய அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருகின்றனர். லயன் குடியிருப்புக்கள் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. பல குடும்பங்கள் தற்காலிக குடில்களில் வாழ்கின்றன. சிலர் பாதுகாப்பான இடத்தில் இடம்பெயர்ந்து வாழுகின்றனர். இந்தக் குறைபாடுகள் குறித்து, கடந்த கால அமைச்சர்களிடம் பலமுறை எடுத்து கூறியும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை. ஆனால், அமைச்சர் திகாம்பரத்தைச் சந்தித்து தமது குறைபாடுகளைத் தெரிவித்த இந்த மக்களுக்கு இன்று விமோசனம் கிடைத்துள்ளது' என்றார்.
அமைச்சர் திகாம்பரத்தின் அமைச்சினூடாக இம்;மக்களுக்கு 200கூரை தகரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எமது சமூகத்தில் பிறந்து வளர்ந்த தலைவன் ஒருவனால்மட்டுமே எமது சமூகத்துக்கு விடிவைப் பெற்றுக்கொடுக்க முடியுமென்பதை, இன்று எமது சமூகம் உணர்ந்துள்ளது' என்றார்.
40 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago