Kogilavani / 2015 செப்டெம்பர் 17 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து கஞ்சா கலக்கப்பட்ட மதனமோதக போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்த இருவரை, கினிகத்தேனை பொலிஸார் வியாழக்கிழமை(17) கைதுசெய்துள்ளதுடன் இவர்களிடமிருந்து 370 மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.
பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்யப்படுவது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து, பொலிஸார் மத்திரை கொள்வனவுக்காக ஒருவரை மேற்படி சந்தேக நபர்களிடம் அனுப்பும்போதே மேற்படி இருவரும் கையும்களவுமாக பிடிப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் கினிகத்தேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள், கினிகத்தேனைக்குட்பட்ட பல பகுதிகளில் போதை பொருள் மாத்திரைகளை விற்பனை செய்துள்ளமையும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேற்படி இருவரையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் நாளை வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
37 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
57 minute ago