2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

புதிய நிர்வாகிககள் தெரிவு

Kogilavani   / 2017 மார்ச் 28 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட சேவையாளர்களுக்கான நடப்பு வருட நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸின் வருடாந்த பொதுக்கூட்டம், கொட்டகலை தொழில்நுட்பக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில், அதன்பொதுச் செயலாளரும், சட்டதரணியுமான கா.மாரிமுத்துசவின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதன்போதே புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைவாக பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸின் தலைவராக ஆறுமுகன் தொண்டமான் எம்.பியும் பொதுச் செயலாளராக சட்டதரணி கா.மாரிமுத்து, உப-தலைவர்களாக ஜி.கணநாதன், பி.லோகமணி, சிவனு சத்தியமூர்த்தி, உப-செயலாளர் என்.சேதுபதி, தேசிய அமைப்பாளராக எஸ்.தேவகுமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பிரதேச வாரியாக கிளைத் தலைவர்களும் கிளைச் செயலாளர்கள் மற்றும் நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X