2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

பின்னவல வணிக நோக்குடைய கிராமத்துக்கு புதிய சேவையாளர்கள்

Niroshini   / 2016 ஜூன் 05 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் கட்டி எழுப்பப்பட்ட பின்னவல வணிக நோக்குடைய கிராமத்துக்கு புதிதாக 40 சேவையாளர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை(02) பின்னவல வணிக நோக்குடைய கிராமத்தித்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் கட்டி எழுப்பப்பட்ட கேகாலை பின்னவல வணிக நோக்குடைய கிராமம் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி கிராமம் பின்னவல மாஓயா மற்றும் பின்னவல யானைகள் சரணாலயம், பின்னவல மிருககாட்சிசாலை ஆகியவற்றின் அருகே அமைக்கப்பட்டுள்ளது.

பின்னவல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள யானைகள் சரணாலயம் மற்றும் மிருககாட்சிசாலை என்பன பார்வையிடுதற்காக சுற்றுலா பயணிகள் கூடுதலானோர் பின்னவல பிரதேசத்துக்கு வருகைதருவதை நோக்காக கொண்டே மேற்படி பின்னவல வணிக நோக்குடைய கிராமம்  யானைகள் சரணாலயம் மிருககாட்சிசாலையின் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் 500 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நான்கு ஏக்கர் பரப்பளவை கொண்டு மேற்படி பின்னவல வணிக நோக்குடைய கிராமம் அமைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் பாரம்பரிய பொருளாதாரம் மற்றும் சமூக கலை கலாசாரம் என்பன உள்ளடக்கப்பட்டே புராதன முறையில் மேற்படி கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்படி கிராமத்தில் ஆராச்சி இல்லம், மருத்துவ இல்லம், கம்மல் இல்லம், கைகளிலான இயந்திரங்களைகொண்டு தயாரிக்கப்படும் உடுப்பு துணி இல்லம், கோப்பி கடே, தச்சு வேலை இல்லம், புராதன இல்லங்கள் உட்பட புராதன பொருட்களால் அமைக்கப்பட்டுள்ள இந்த கிராமத்தை சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் பார்வையிட்டு வருகின்றனர்.

கேகாலை மாவட்டத்தில் ரம்புக்கனை பின்னவல சுற்றுலா வலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வணிக நோக்குடைய கிராமத்தின் மூலம் பிரதேசத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பை பெற்று கொடுப்பதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமையவே மேற்படி 40 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது.

மேற்படி நியமனம் வழங்கும் நிகழ்வில், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கணக ஹேரத், சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் எச்.பி.குலரத்ன, பின்னவல வணிக நோக்குடைய கிராமத்தின் பிரதான பணிப்பாளர் அநுருந்த பண்டார உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .