Sudharshini / 2015 ஒக்டோபர் 12 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
பெருந்தோட்டங்களிலுள்ள மரங்களை எதிர்காலத்தில் வெட்டுவதற்கு அனுமதிக்க முடியாது. மரங்களை வெட்டி அவற்றை இல்லாதொழித்த காரணத்தினால்தான் பெருந்தோட்ட மக்கள் இன்று குளவி கொட்டுக்கு ஆளாகின்றனர். அதனை தடுத்து பெருந்தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும்' என நிலையான அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்;,
'மனிதர்கள் கொலை செய்தால் அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என சட்டம் கூறுகின்றது. அதேபோன்று மற்ற உயிரினங்களுக்கு தீங்கு ஏற்படுத்துபவர்களை எதிர்காலத்தில் இனங்கண்டு, அவர்களுக்கும் உரிய தண்டனையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான சட்டங்களை அமுல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.
அனைத்து மாவட்டங்களுக்கும் நான் எதிர்காலத்தில் செல்ல இருக்கின்றேன். காரியாலயத்தில் இருந்துக் கொண்டு அறிக்கைகளை பார்த்து வேலை செய்ய முடியாது. வன ஜீவராசிகள் தொடர்பாகவும் வனங்கள் தொடர்பாகவும் மிக உன்னிப்பாக இன்று உலகில் கவனிக்கப்பட்டு வருகின்றது. அதிலும் உலக வங்கி அதிக அக்கறை செலுத்துகின்றது. எனவே, நாமும் இந்த விடயங்களில் கவனம் செலுத்த வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது. உலகின் இயற்கை மாசடைந்துள்ளது. இதற்கு பரிகாரம் செய்ய வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது.
நுவரெலியாவின் இன்றைய நிலை தொடர்ந்தால் குறிப்பிட்ட ஒரு காலத்தில் இங்கிருக்கின்றவர்கள் எல்லோரும் வேறு மாவட்டங்களுக்கு சென்று குடியேறவேண்டிய நிலை ஏற்படும். இன்று காலநிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
எந்த காரணம் கொண்டும் வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு சொந்தமான காணியில் குடியேறுவதோ அல்லது வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதையோ அனுமதிக்க முடியாது. எனவே, அதிகாரிகள் உரியவகையில் சட்டங்களை அமுல்படுத்த வேண்டும். எந்த காரணம் கொண்டும் யாருடைய கட்டளைக்கும் பணிந்து நடக்க வேண்டிய தேவையில்லை' என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, நுவரெலியாவில் அண்மையில் உயிரிழந்த சிறுத்தை தொடர்பாக, விரிவாக ஆராய்ந்து தனக்கு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு அவர் பணித்துள்ளார்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026