2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பாரவூர்தி குடைசாய்ந்ததில் ஒருவர் படுகாயம்

Princiya Dixci   / 2017 மார்ச் 18 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு. இராமச்சந்திரன்

கொழும்பு - ஹட்டன் பிரதான வீதியில் வட்டவலைப் பகுதியில் பாரவூர்தியொன்று குடைசாய்ந்ததில் ஒருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆகரப்பத்தனைப் பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி இனிப்புப் பானங்கள் ஏற்றிச்சென்ற பாரவூர்தியே, வட்டவலை ரொசல்லை பகுதியில் நேற்று (17)  மாலை 4.30 மணியளவில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக வட்டவலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனத்தில் ஏற்பட்ட திடீர் கோளாரே விபத்துக்கான காரணமென்றும் காயமுற்ற சாரதி, வட்டவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்வதாக, வட்டவலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .