Administrator / 2015 செப்டெம்பர் 20 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சி.எம்.ரிஃபாத், மொஹொமட் ஆஸிக்
கண்டி, பிலிமத்தலாவ அரம்பேகம பகுதியில் போலி கச்சேரி நடத்திவந்ததாக கூறப்படும் கிராமசேவகரின் அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்ட பொலிஸார், அவ் அலுவலகத்திலிருந்து போலி ஆவணங்களையும் இறப்பர் முத்திரைகள் 57 உட்பட பல பொருட்களை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.
கண்டி, போகம்பரை பிரதேசத்தில் கிராமசேவையாளராக கடமையாற்றி வரும் நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைப்பற்றப்பட்ட 57 இறப்பர் முத்திரைகள், கண்டி மேலதிக பதிவாளர், பிரதேச செயலாளர்கள், சமாதான நீதவான்கள், பாடசாலை அதிபர்கள் போன்ற உயர் பதவிகளை வகிப்போருக்கு உரியது என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, தேசிய அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ் உட்பட பல்வேறு போலி ஆவணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
54 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
2 hours ago