Janu / 2026 ஏப்ரல் 28 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் நகரில் இயங்கி வரும் நோர்வூட் பிரதேச செயலகத்தை மீண்டும் நோர்வூட் பகுதிக்கே கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி, 'மலையக அரசியல் அரங்கம்' கட்சியினால் திங்கட்கிழமை (27) அன்று பொகவந்தலாவ நகரில் கையெழுத்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நோர்வூட் பிரதேச செயலகம், ஆரம்பத்தில் நோர்வூட், 'தியசிறிகம' பகுதியில் இயங்கி வந்தது. எனினும், அங்கு போதிய இடவசதி இல்லாமை மற்றும் பொதுமக்களுக்கான சேவைகளை வழங்குவதில் நிலவிய உட்கட்டமைப்பு வசதி குறைபாடுகள் காரணமாக, அது தற்காலிகமாக ஹட்டன் நகருக்கு இடமாற்றப்பட்டது.
தற்போது இச்செயலகம் ஹட்டன் நகரில் வசதியான இடத்தில் இயங்கி வந்த போதிலும், நோர்வூட் பகுதி மக்கள் தமது தேவைகளுக்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்தே, இச்செயலகத்தை மீண்டும் நோர்வூட் பகுதிக்கே கொண்டு செல்ல வேண்டுமென வலியுறுத்தி, மலையக அரசியல் அரங்கத்தின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ் தலைமையில் இக்கையெழுத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் பெருந்தோட்ட தொழிலாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு தமது ஆதரவினை தெரிவித்தனர்.


47 minute ago
48 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
48 minute ago
53 minute ago