2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

பசறை பிரதேச சபை அசமந்தம்

Kogilavani   / 2020 நவம்பர் 30 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சு.சுரேந்திரன்  

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், பசறை பிரதேச சபை அசமந்தப் போக்கில் செயற்பட்டு வருவதாக, பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

மேற்படி பிரதேச சபைக்கு உட்பட்ட 13ஆம் கட்டைப் பகுதியில் இதுவரை, 12 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் எனினும் இதுவரை அப்பகுதியில்  சுகாதார, பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

தொற்று நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இப்பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேறாத வண்ணம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது தொடர்பில் பசறை பிரதேசசபை கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X