R.Maheshwary / 2022 ஜூன் 01 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் (30) மாலை 6 மணி தொடக்கம் இரவு 8 மணி வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவரும் போதை மாத்திரைகளுடன் மூவரும் நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நால்வரும் பொது இடத்தில் குடிபோதையுடன் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட இருவரும் பொது இடத்தில் புகைப்பிடித்தலில் ஈடுபட்ட ஒருவருமாக 13 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பசறை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் திலிப் த சில்வாவின் ஆலோசனையின் பேரில் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago