Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Gavitha / 2021 ஜனவரி 05 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
பசறையில் மேலும் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பசறை பகுதியில் பதிவு செய்யப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை, 26ஆக அதிகரித்துள்ளது என, பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் வி.இராஜதுரை தெரிவித்தார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், பசறை, பொல்காந்ததை மேற்பிரிவு தோட்டத்தில், 19 வயது பெண்ணொருவர், தொற்றாளராக இனங்காணப்பட்டார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து ஆறு பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று (05) இதன் அறிக்கைகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையிலேயே, 42 வயதுடைய பெண்ணொருவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர், ககாகொல்லை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், பசறைப் பகுதியின் டெமோரியா மற்றும் காவத்தை போன்ற பெருந்தோட்டங்களிலிருந்து, கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டு, கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்பட்டிருந்த இரு யுவதிகளும் பூரண குணமடைந்து, நேற்று (05), வீட்டுக்குத் திரும்பினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago