2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பசறையில் மேலும் இரண்டு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்

Kogilavani   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசறை - டெமேரியா, கோணக்கலை காவத்தைப் பகுதிகளில், மேலும் இரு தொற்றாளர்கள், நேற்று முன்தினம் (29) இனங்காணப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து வருகை தந்த 34 பேர், பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அதன் முடிவுகள் நேற்று (29) கிடைக்கப்பெற்ற போதே, இரு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேற்படி இருவரும் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் வீ.இராஜதுரை தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X