2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

பச்சிளம் சிசு விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Editorial   / 2023 மார்ச் 12 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலின் மலசலக்கூடத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (10) இரவு 15 நாட்களேயான பச்சிளம் சிசு மீட்கப்பட்ட சம்பவத்தில் அந்த சிசுவின் தாயும், தந்தையும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

  வெவ்வேறு இடங்களில் வைத்தே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 25 வயதான தாய் பண்டாரவளையிலும், 26 வயதான தந்தை கொஸ்லாந்தையிலும் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் அச்சிசுவின் தந்தை, பதுளை நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதனையடுத்து அவரை, எதிர்வரும் 15ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X