2026 ஜனவரி 21, புதன்கிழமை

‘பட்டினியிலிருந்து காப்பாற்றுங்கள்‘

Ilango Bharathy   / 2021 ஜூன் 27 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட, கொத்மலை பிரதேச செயலகத்திற்குறிய    கெட்டபுலா அரங்கலை  தோட்டத்தின் மக்கள் எதிர் கொண்டு வரும் பட்டினியைப் போக்க  உதவிக் கரம் நீட்டுமாறு அத் தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கொரோனாத் தொற்று காரணமாக அப்பகுதியில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 191 பேர் கடந்த (24) ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த மக்கள் ஒரு வேளைச் சாப்பாட்டைக் கூட முறையாக உண்ண வழியில்லாமல் பட்டினியை எதிர் கொண்டு வருவதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X