2026 மே 02, சனிக்கிழமை

’பணயக் கைதிகளான தமிழர்கள் இராணுவத்தினராலேயே மீட்கப்பட்டனர்’

மொஹொமட் ஆஸிக்   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டு மக்கள் சுதந்திரமாகவும் பாதூகாப்பாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்க  உயிரை பணயம் வைத்து செயற்படுவதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார.

அப்பாவித் தமிழ் மக்கள் பயங்கரவாதிகளின் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட போது, அவர்களை மீட்ட இராணுவத்தினர் பாராட்டுக்க உரியவர்கள் எனவும் கூறினார்.

கண்டியில் அமைக்கப்பட்டுள்ள எமால் குனசேக்கர அமைப்பால், யுத்தத்தின் போது காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு, 1 மில்லியம் ரூபாய் நிதி வழங்கும் நிகழ்வு, கண்டி எர்ல் ரிஜன்சி ஹோட்டலில், இன்று (08) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “முப்பது ஆண்டுகால யுத்தத்தின்போது, அப்பாவி தமிழ் மக்களை பணயக் கைதிகளாக பயன்படுத்திய பயங்கரவாதிகள், தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முயன்றனர். அவர்களின் பிடியிலிருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கு எடுத்த நடவடிக்கையிலேயே, இந்த இளைஞர்கள் தமது உடலுறுப்புக்களை இழந்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாதத்தை ஒழித்து, இந்த நாட்டை இராணுவம் மீட்டது. நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, இராணுவத்தினர், அவர்களது உயிரைப் பணயம் வைத்து கடமையாற்றி வருகின்றனர்.

இராணுவ தளபதியாக தன்னை நியமித்தைக்கு எதிராக வெளிநாடுகளால் கொடுக்கப்பட்ட அழுத்தங்களை பொருட்படுத்தாமல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தீர்மானத்தில் உறுதியாக இருந்தார்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .