Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Kogilavani / 2017 நவம்பர் 13 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
“லுணுகலை பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களில் நானும் ஒருவன். ஆனால், எனக்குரிய முக்கியத்துவத்தை பிரதேச அபிவிருத்திக் குழு வழங்குவதில்லை. குறிப்பாக, எனது பணியை சிறப்புடன் மேற்கொள்ள, லுணுகலை பிரதேச செயலகம் பல்வேறுத் தடைகளை ஏற்படுத்திவருகிறது” என்று, ஊவா மாகாண சபை உறுப்பினர் வே.ருத்திரதீபன் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
“எனக்கு எதிரான பதாதைகளை தாங்கிய வண்ணம், லுணுகலை பிரதேச செயலகத்தில், சிலர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். எமது மக்களுக்கான புறக்கணிப்பு, பாகுபாடுகள் மற்றும் தமிழ் மொழியுரிமை மீறப்பட்டமை ஆகியன குறித்து, தமிழ் மக்களின் பிரதிநிதியான நான் குரல் எழுப்புவதை பேரினவாதிகள் விரும்பவில்லை. இதனால், நான் ரௌடிசத்தை, சண்டித்தனத்தை மேற்கொள்வதாகக் கூறுகின்றனர். எம் மக்களுக்கான உரிமையைக் கோருவது, எவ்வகையில் 'ரௌடிசம், சண்டித்தனமாகும்?
“லுணுகலை பிரதேச அபிவிருத்தி இணைப்புக்குழு கூட்டம், கடந்தத் திங்கட்கிழமை நடைபெற்ற போதிலும், அது குறித்து எனக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இணைத்தலைவரென்ற ரீதியில் நடத்தப்படும் கூட்டம் குறித்து, எனக்கு அறிவிக்கப்படுவதுமில்லை. எனது ஆலோசனைகள் செவிமடுக்கப்படுவதுமில்லை.
“இதுவிடயமாக, பிரதேச செயலாளர் டி.எம்.எஸ்.எச்.திசாநாயக்கவிடம் வினவினேன். இவ்வளவுதான் நடந்தது. ஆனால், பிரதேச செயலகத்தினர் சிலர், எனக்கெதிராகவும் நல்லாட்சிக்கு எதிராகவும், மறியல் போராட்டத்தை மேற்கொண்டனர்.
“முப்பதாயிரம் விருப்பு வாக்குகளைப் பெற்று, எமது மக்களின் பிரதிநிதியாக நான் இருந்து வருகின்றேன். எமக்கான மொழியுரிமை மீறப்படும் போதும், எமது சமூகம் புறக்கணிக்கப்படும் போதும், பெருந்தோட்டப் பகுதிகளில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படாத வேளையிலும், அது குறித்து, சம்பந்தப்பட்டவர்களுடன் வினவி, அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது, எனது பொறுப்பாகும்.
“லுணுகலை பிரதேசத்தின் 28 கிராமசேவர் பிரிவுகளில் 35 பெருந்தோட்டப் பிரிவுகளும் 20 கிராமங்களும் உள்ளடங்கியுள்ளன. 64 சதவீதமான தமிழ் பேசும் மக்கள், இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களின் குரலாகவே, எனது செயற்பாடுகள் அமைகின்றன.
“இதுவே, பேரினவாதிகள் என்மீது கொண்டிருக்கும் எதிர்ப்புக்குக் காரணமாகும். இவ்வாறான எதிர்ப்புகளுக்கு பயந்து, எனது சமூகத்தைவிட்டு, என்னால் ஒதுங்கிவிட முடியாது.
“இத்தகைய முரண்பாடுகளால் சாதாரண மக்களுக்கான சேவைகள் முடங்குவதை, என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. லுணுகலை பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் தொடர்பாக, எனக்கேற்பட்ட அநீதியான செயற்பாடுகள் குறித்து, எனது மக்களும் கடும் ஆட்சேபத்தை தெரிவித்து வருகின்றனர்.
“எனக்கு ஏற்பட்ட நிலை குறித்தும் எமது மக்கள் புறக்கணிக்கப்படுவது குறித்தும், மொழி உரிமை மீறப்பட்டிருப்பது குறித்தும், ஜனாதிபதி, ஊவா மாகாண முதலமைச்சர், பதுளை மாவட்ட அரச அதிபர் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளேன்” என்று கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago