Ilango Bharathy / 2021 ஜூன் 23 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையகத்தில் அண்மைக்காலமாகத் தோட்ட கள உத்தியோகத்தர்கள் மீது தொழிலாளர்கள்
தாக்குதல் நடத்தப்படுவதும், அதற்கு எதிராக தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு எதிராக
சட்டநடவடிக்கை எடுத்தல், பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுதல் போன்ற செயற்பாடுகள் பரவலாக
அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கக்கலை தோட்ட கள
உத்தியோகத்தர்கள் மூவர் மீது, குறித்த தோட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தாக்குதலை
மேற்கொண்டதையடுத்து, அவ் அதிகாரிகள் மூவரும் லிந்துலை வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை கைதுசெய்யக் கோரி, தங்கக்கலை தோட்ட கள
உத்தியோகத்தர்கள் இன்று (23) பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
தாக்குதலை மேற்கொண்ட நபர், மரமொன்றை வெட்டியதாகவும், இதற்கு தோட்ட நிர்வாகம்
சார்பில் கள உத்தியோகத்தர்கள் மூவரும் எதிர்ப்பு தெரிவித்த போதே, தாக்குதலுக்கு
இலக்காகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தாக்குதலை நடத்திய நபர் தோட்டத்தில் பணிபுரிபவர் அல்ல என்று
தெரிவித்துள்ள நிர்வாகம் அவருக்கு எதிராக, லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டும் இதுவரை அவர் கைதுசெய்யவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
எனவே, சந்தேகநபரைக் கைதுசெய்யும் வரை, பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக
தெரிவித்துள்ள நிர்வாகத்தினர், தங்கக்கலை தோட்டத்தின் 4 பிரிவுகளைச் சேர்ந்த 22
உத்தியோகத்தர்களுடன் 630 தொழிலாளர்களும் தமது பணிப் பகிஷ்கரிப்புக்கு ஆதரவு தெரிவித்துக் களத்தில் குதித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
34 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago