2026 ஜனவரி 21, புதன்கிழமை

பண்டாரவளை நகர பொதுச்சந்தைக்கு பூட்டு

Niroshini   / 2021 மே 09 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், இரா.சுரேஸ்குமார்

பண்டாரவளை நகர பொதுச்சந்தை  இன்று (09) முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு சந்தை மூடப்பட்டுள்ளது.

இருப்பினும், இன்று காலை வெல்லவாய, ஹப்புத்தளை  பகுதிகளைச் சேர்ந்த சில்லறை வியாபாரிகள் சிலர், அத்துமீறி விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, பண்டாரவளை மாநகர சபை, பிரதேச செயலக சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பண்டாரவளை பொலிஸார் இணைந்து அவர்களை திரும்பியனுப்பினர்.

இந்நிலையில், அப்பகுதியில் சுகாதார அதிகாரிகளும், பொலிஸாரும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X