ஆர்.மகேஸ்வரி / 2018 மே 08 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆவணக் காப்பகப் பகுதியில் இடம்பெற்ற தீவிபத்து தொடர்பில் சந்தேகநபரொருவர் கடந்த 6ஆம் திகதி மஹரகம ரயில் நிலைய பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இவர் ஆலி-எல பகுதியைச் சேர்ந்த 41 வயதானவரெனவும் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் இன்று (8) இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேல்மாகாண புலனாய்வு பிரிவு, பண்டாரவளை பொலிஸார் மற்றும் பிலியந்தலை பொலிஸார் ஆகியோர் இணைந்து குறித்த சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபருக்கு எதிராக வீடுடைப்பு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் மாத்திரம் 11 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சந்தேகநபர் இன்றைய தினம் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
4 hours ago
9 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
22 Dec 2025