Sudharshini / 2015 செப்டெம்பர் 02 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
பதுளை அரசினர் வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவில் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கியின் பொறுப்பாளர் எ.பி.விஜயரட்ன தெரிவித்தார்.
இரத்தம் தேவைப்படும் நோயாளர்கள் இதனால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கடந்த இரண்டு மாதங்களாக இரத்த தானம் செய்பவர்கள் எண்ணிக்கையில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தேர்தல் காலம் என்பதால் இதில் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாமென கருதப்படுகின்றது. இதனால், இரத்த வங்கியில் இரத்தத்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
எனவே, நலன்விரும்பிகள், சமூகசேவையாளர்கள், இரத்த கொடையாளர்கள் மனமுவர்ந்து இரத்த தானம் செய்ய முன்வரவேண்டுமென அவர் கோரியுள்ளார்.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago