2025 மே 10, சனிக்கிழமை

போதையில் தள்ளாடிய வேட்பாளர் கைது

Janu   / 2025 ஏப்ரல் 23 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுபோதையில் முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற அம்பகமுவ பிரதேச சபை வேட்பாளர் ஒருவர், சந்தேகத்தின் பேரில் செவ்வாய்க்கிழமை (22) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சந்தேக நபருக்கு எதிராக கினிகத்ஹேன பொலிஸாரால் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் அதிக மதுபோதையில் தனது முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்றபோது, கினிகத்தேன பொலிஸ் நிலையத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளால், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சந்தேக நபர் புதன்கிழமை (23) அன்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதால் ,வழக்கு ஜூன் மாதம் இரண்டாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது .

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X