2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பதுளை மாவட்டத்தில் கொரோனா தாண்டவம்

Kogilavani   / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா
 
பதுளை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை நால்வர் மரணமடைந்துள்ளதுடன் நேற்று (8) காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், 197 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்று, பதுளை மாவட்ட கொவிட் 19 தடுப்பு செயலணி தெரிவித்தது. 
 
ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் இதுவரையில் பதுளை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மொத்தமாக 584 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் மேற்படிச் செயலணி அறிவித்துள்ளது.
 
கொரோனா தொற்றினால் வெலிமடையில் ஒருவரும் தியத்தலாவையில் இருவரும் மஹியங்கனையின் ஒருவரும் மரணமடைந்துள்ளனர்.
 
மகியங்கனைப் பகுதியில் இரு ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்பதுடன் இந்த ஆடைத் தொழிற்சாலைகளில் பணிப்புரிந்த 185 பேர் தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
 
பதுளை மாவட்டத்தில், இதுவரை 800 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 617 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X