R.Maheshwary / 2021 நவம்பர் 14 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
பதுளை மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் 180 க்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 9 வயது சிறுவன் உட்பட 4 பேர் மரணித்துள்ளனர்.
எனவே, பதுளை மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக, மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, பாடசாலைகளையும் அரச அரசசார்பற்ற நிறுவனங்களையும் பொது இடங்களையும் சுத்தம் செய்யுமாறு, பதுளை மாவட்ட செயலகத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் வெள்ளிக்கிழமையின் பின்னர், பசறை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து இடங்களும் சுகாதார பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும், இதன்போது,டெங்கு நோய் பரவக்கூடிய வகையில் சுற்றுசூழல் காணப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில், இன்று (14) காலை 10.00 மணிக்கு பசறை வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு, டெங்கு நோய் சம்பந்தமான தெளிவூட்டல்கள், பசறை கெமுனு மகா வித்தியாலயத்தில் இடம்பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 minute ago
26 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
26 minute ago
43 minute ago
2 hours ago