2026 மார்ச் 23, திங்கட்கிழமை

பதுளையில் நான்கு கடைகளில் அரிசி விற்பனை செய்ய தடை

R.Maheshwary   / 2022 ஜூன் 14 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு  தனராஜா

பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில், அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த நான்கு வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பதுளை நகரில்  நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளினால் நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, குறித்த வர்த்தகர்கள் சிக்கியுள்ளனர்.

இதன்போது அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தமை, விலைப்பட்டியல் காட்சிப் படுத்தப்படாமை தொடர்பில் நான்கு வர்த்தக நிலையங்களுக்கு எதிராக எதிர்வரும் 27 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. 

அத்துடன், மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை நான்கு விற்பனை நிலையங்களுக்கும் அரிசி விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .