2024 ஜூன் 07, வெள்ளிக்கிழமை

பதுளையில் பாரிய மண்சரிவு: 4 வாகனங்கள் சேதம்

Mayu   / 2024 ஜனவரி 10 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரவளை, உடுஹுல்பொத்த பகுதியில் இன்றைய தினம் (10) பண்டாரவளை - பதுளை பிரதான வீதியில் மண்மேடு சரிந்து வீதியில் விழுந்ததில்  நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

இரு வாகனங்கள் முழுமையாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளதோடு இரு வாகனங்கள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

இரு சொகுசு வாகனங்கள், வேன் மற்றும் ஆட்டோவொன்றே இவ்வாறு மண்சரிவில் சிக்குண்டு சேதமடைந்துள்ளன.

சேதமடைந்த வாகனங்களுள் மூன்று, அப்பகுதியில் உள்ள கராஜுக்கு வந்திருந்தவை எனவும், ஆட்டோ அவ்வழியாக பயணித்த வாகனம் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் இவ்வனர்த்தத்தில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லையென  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

க.கிஷாந்தன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .