2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

‘பதுளையில் புரட்சித் தமிழர் பேரவை வெற்றிபெறும்’

Editorial   / 2020 ஜூலை 28 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத் தேர்தலில்,  பதுளை மாவட்டத்தில் புரட்சித் தமிழர் பேரவை  வெற்றிபெறும். எனவே, இந்த வெற்றியில் மலையக மக்கள் அனைவரும் இனைந்துகொள்ளுங்கள் என, வேட்பாளர்  சட்டத்தரணி சிறில்ராஜ் தெரிவித்தார்.

ஹப்புத்தளை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே,  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், எதிவரும் நாடாளுமன்ற தேர்தலில்  புரட்சித் தமிழர் பேரவை பதுளை மாவட்டத்தில் வெற்றிபெறும். எனவே, அந்த வெற்றியில் மலையக மக்கள் இணைந்துகொள்ளுங்கள் . கரும்பலகை சின்னத்தில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடும் எமது அணி அதிக வாக்குகளை பெற்றுகொள்ளும்,  அதில் எந்த சந்தேகமும் இல்லை. மக்கள் எந்த அச்சமும் இன்றி எம்மோடு இணைந்துகொள்ளுங்கள் என்றார்.

” மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்படவேண்டிய பல்வேறு  வேலைத்திட்டங்கள் உள்ளன.  அவற்றை செய்வதற்காகவே, 

தேர்தலில் களம் கொண்டுள்ளேன் எனவே,  எமது  வெற்றியின் பின்னர்,  உரிமை மற்றும் அபிவிருத்தி நோக்கி பயணிக்கவேண்டும் என அவர்  மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .