2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பதுளையில் போராட்டம் வெற்றி

Kogilavani   / 2021 பெப்ரவரி 05 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.புவியரசன்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 1,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, மலையகமெங்கும் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் பதுளை மாவட்டத்தில்   வெற்றி பெற்றுள்ளது. 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் முன்னெடுக்கப்படும் இவ்வேலை நிறுத்தத்தத்துக்கு மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், விவசாயத் தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உட்பட அனைத்து மலையக தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கி வருகின்றன. 
பசறை, எல்டெப், மீதும்பிட்டிய, கோணக்கலை பகுதிகளில் தொழிலாளர்கள் வீ

டுகளில் இருந்து கொண்டு அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 
பெருந்தோட்டங்களுக்கான இணைப்புச் செயலாளரும் ஊவா மாகாண முன்னாள் அமைச்சருமான செந்தில் தொண்டமான்,  தோட்டங்களுக்கு விஜயம் செய்து தொழிலாளர்களை சந்தித்து வருகின்றார.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X