2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

‘பன்விலை மக்களிடம் கோரிக்கை’

Gavitha   / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில், பன்விலை பிரதேச மக்கள் அவதானத்துடன் இருக்கவேண்டும் என, பன்விலை பொலிஸ் நிலைய பொறுப்திகாரி ரசிக்க சம்பனத் கோரிக்கை விடுத்துள்ளார்.

பன்விலை பிரதேச செயலாளர் பிரிவில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படாவிட்டாலும், அப்பிரதேசத்தை அண்டிய வத்தேகம மெனிக்கின்ன பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்றமையாலேயே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

மேலும், போலிப் பிரசாரங்கள் காரணமாக, பன்விலை மக்கள் பீதியுடன் இருப்பதாகவும் அவற்றை நம்பாமல், விழிப்பாக இருப்பதே அவசியமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெளிப்பிரதேசங்களில் இருந்து வருபவர்களுடன் தொடர்புகளை பேணும்போது, மிகுந்த அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவசியமற்ற பயணங்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்காக, பொதுமக்களை விழிப்பூட்டும் செயற்றிட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வாகனங்களில் ஒலிப்பெருக்கிகள் மூலம் அறிவித்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தளல், ஸ்டிக்கர்களை ஒட்டுதல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்பிரகாரம், பன்விலை நகரில் “மீட்டரான வாழ்க்கை” ஸ்டிக்கர் ஒட்டும் வேலைத்திட்டம் ஒன்று பன்விலை நகரில் இடம்பெற்றது. இதில் பன்விலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரசிக்க சம்பத், பொலிஸ் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X