2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பன்விலை விபத்தில் நால்வர் காயம்

Editorial   / 2025 டிசெம்பர் 20 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன் பன்விலை நகரில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பன்விலை பொலிஸார் தெரிவித்தனர். பன்விலை மணிக்கூட்டு சந்தியில் பிட்டகந்தை நோக்கி சனிக்கிழமை (20.) மாலை திருப்ப முனைந்த முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாதசாரிகள் இருவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவருமாக மொத்தம் நால்வர் காயமடைந்ததாகவும். மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். காயமடைந்த வர்கள் நால்வரும் மக்கானிகமை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு பின்னர் கண்டி மாவட்ட ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவ்விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை பன்விலை பொலிஸார் தெரிவித்தனர்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X